6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தொழில்-வணிகம் - இயல் ஆறு - கூடித்-தொழில்-செய் - சுட்டு எழுத்துகள்-வினா எழுத்துகள்

  Play Audio

1. ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் ----- என்று பெயர்?

Answer: சுட்டு எழுத்துகள்

2. சுட்டு எழுத்துகள் எத்தனை?

Answer: மூன்று (அ, இ, உ)

3. தற்போது எந்த எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை?

Answer: உ

4. சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது ----- எனப்படும்?

Answer: அகச்சுட்டு

5. அகச்சுட்டு எடுத்துக்காட்டு தருக?

Answer: இவன், அவன், இது, அது

6. சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது ----- எனப்படும்?

Answer: புறச்சுட்டு

7. புறச்சுட்டு எடுத்துக்காட்டு தருக?

Answer: அவ்வானம் - இம்மலை - இந்நூல்

8. நம் அருகில் (அண்மையில்) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது ----- எனப்படும்?

Answer: அண்மைச்சுட்டு

9. அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து எது?

Answer: ‘இ’

10. அண்மைச்சுட்டு எடுத்துக்காட்டு தருக?

Answer: இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு

1

11. தொலைவில் (சேய்மையில்) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது ----- எனப்படும்?

Answer: சேய்மைச்சுட்டு

12. சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து எது?

Answer: ’அ’

13. சேய்மைச்சுட்டு எடுத்துக்காட்டு தருக?

Answer: அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம்

14. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ----- என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது?

Answer: ‘உ’

15. அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது ----- எனப்படும்?

Answer: சுட்டுத்திரிபு

16. வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு ----- என்று பெயர்?

Answer: வினா எழுத்துகள்

17. வினா எழுத்துகள் எத்தனை?

Answer: ஐந்து (எ, யா, ஆ, ஓ, ஏ)

18. மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் எவை?

Answer: எ, யா (எங்கு, யாருக்கு)

19. மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்துகள் எவை?

Answer: ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)

20. மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்துகள் எவை?

Answer: ஏ (ஏன், நீதானே)

2

21. வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது ----- எனப்படும்?

Answer: அகவினா

22. அகவினா எடுத்துக்காட்டு தருக?

Answer: எது, யார், ஏன்

23. வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது ----- எனப்படும்?

Answer: புறவினா

24. புறவினா எடுத்துக்காட்டு தருக?

Answer: அவனா? வருவானோ?

25. கலைச்சொல் அறிவோம்: பண்டம்

Answer: Commodity

26. கடற்பயணம்

Answer: Voyage

27. பயணப்படகுகள்

Answer: Ferries

28. தொழில் முனைவர்

Answer: Entrepreneur

29. பாரம்பரியம்

Answer: Heritage

30. கலப்படம்

Answer: Adulteration

31. நுகர்வோர்

Answer: Consumer

32. வணிகர்

Answer: Merchant

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்